Warning: Cannot modify header information - headers already sent by (output started at /home/ksweberd/tamilyugam.in/index.php:35) in /home/ksweberd/tamilyugam.in/wp-content/themes/vinkmag/functions.php on line 264
வங்கியில் வேலை வேண்டுமா?.. உங்களுக்கான சூப்பர் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு..!! – Tamil News, Online Tamil News, தமிழ் செய்திகள் – Tamilyugam

வங்கியில் வேலை வேண்டுமா?.. உங்களுக்கான சூப்பர் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு..!!

இந்திய தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் ஒன்றான பஞ்சாப் & சிந்து வங்கி ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Physiotherapist பணிக்கென காலியாக உள்ள பல்வேறு பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Physiotherapist பணிக்கென காலியாக உள்ள பல்வேறு பணியிடங்கள் நிரப்ப உள்ளது.

கல்வி தகுதி:
  • விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Bachelor’s or Master’s Degree in Physiotherapy தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Master Degree தேர்ச்சி பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
வயது வரம்பு:

வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

ஊதிய விவரம்:

இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.7,200/- மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் Contract அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 8.10.2024 ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

மேலும் விவரங்களுக்கு:

https://punjabandsindbank.co.in/system/uploads/recruitment/2150_2024100113581768527.pdf

Read Previous

வாட்ஸ் ஆப்பில் வந்தது புதிய அப்டேட்..!! ENJOY பண்ணுங்க மக்களே..!!

Read Next

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை..!! மாவட்டங்களுக்கு பறந்த முக்கிய உத்தரவு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular