தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை விரைவில் தொடங்க உள்ளது. இந்த பருவ மழை காலங்களில் மக்களின் போக்குவரத்து, சுகாதாரம் மற்றும் அத்தியாவசிய தேவை உள்ளிட்டவைகள் குறித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்வது வழக்கம். இந்நிலையில் நடப்பு ஆண்டு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து அனைத்து மாவட்ட சுகாதாரத் துறை உதவி இயக்குனர்களுக்கும் பொது சுகாதாரத்துறை சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது.
அதில், ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர நலவாழ்வு மையங்களில் தேவையான மருந்துகளை இருப்பு வைக்கவும், மழைநீர் புகாமல் இருக்க நடவடிக்கை எடுக்கவும் ஆணையிட்டுள்ளது. மேலும், டெங்கு பாதிப்பு நிலவரங்களை கண்காணிக்க , கொசு ஒழிப்பு பணிகளை இணைந்து செயல்படுத்தவும் அறிவுறுத்தியுள்ளது.




