
Oplus_131072
ஒரு மனிதனுக்கு சேமிப்பு எவ்வளவு முக்கியம் என்பதை விளக்கும் பதிவு!!! சமூக வலைத்தளங்களில் பிரபலம் ஒருவர், எப்படித் தனது வீட்டில் வேலை செய்யும் பெண் ஒருவர் ரூ.60 லட்சத்திற்குச் சொந்தமாக ஒரு வீட்டை வாங்கினார் என்பது குறித்த தகவலைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.மேலும், தேவையில்லாத பொருட்களில் செலவழிப்பதற்குப் பதிலாகச் சேமிப்பது எந்தளவுக்கு முக்கியம் என்பது குறித்தும் அவர் சில கருத்துகளைப் பகிர்ந்துள்ளார்.
எப்போதும் பணத்தைச் சேமிப்பது ரொம்பவே முக்கியமான ஒன்று. பணத்தைச் செலவழிக்காமல் இருக்கும்போது அது வலிக்கும் என்றாலும், அதைத் தாண்டி பணத்தைச் சேமித்தால் கடைசி வரை கஷ்டப்படாமல் வாழ முடியும். அப்படியொரு நிகழ்வு குறித்த தகவலைத் தான் சமூக வலைத்தளப் பிரபலம் நளினி உனாகர் பகிர்ந்துள்ளார்.தனது வீட்டு வேலை செய்யும் பெண் சூரத்தின் 60 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பை வாங்கியதாக நளினி உனாகர் கூறியுள்ளார்.. ஃபர்னிச்சருக்காக 4 லட்சம் செலவழித்துள்ளார். இவ்வளவு செலவு செய்தாலும் வெறும் 10 லட்சம் ரூபாய் மட்டுமே கடன் வாங்கியதாகவும் கூறியுள்ளார். வீட்டில் வேலை செய்யும் பெண் எப்படி இந்த 60 லட்சம் மதிப்பிலான வீட்டைக் குறைந்த கடனில் வாங்கினார் என்பதையும் அவர் பகிர்ந்துள்ளார். அவரது இந்த போஸ்ட் தான் இணையத்தில் இப்போது டிரெண்டாகி வருகிறது.
இது தொடர்பாக அவர் தனது ட்விட்டரில், “எனது வீட்டில் வேலை செய்யும் பெண் இன்று மிகவும் மகிழ்ச்சியுடன் வீட்டிற்கு வந்தார். என்ன விஷயம் என்று அவரிடம் கேட்டேன். அப்போது அவர் சூரத்தின் 60 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஒரு 3BHK பிளாட் வாங்கியதாகவும், ஃபர்னிச்சருக்காக 4 லட்சம் ரூபாய் செலவழித்ததாகவும் கூறினார். மேலும், இதற்கு வெறும் 10 லட்சம் ரூபாய் மட்டுமே கடன் வாங்கியதாகவும் சொன்னார்.
இதைக் கேட்டதும் நான் நிஜமாகவே அதிர்ச்சி அடைந்தேன். வெறும் ரூ.10 லட்சம் கடனில் எப்படி வாங்க முடிந்தது என்பது அதிர்ச்சியாகவே இருந்தது. இதை அவரிடமே நான் கேட்டுவிட்டேன். அருகிலுள்ள வேலாஞ்சா கிராமத்தில் இரண்டு மாடி வீடு மற்றும் ஒரு கடையைச் சொந்தமாக வைத்திருப்பதாகவும் அதை வாடகைக்கு விட்டிருப்பதாகவும் கூறினார். இதைக் கேட்டவுடன் நான் பேச முடியாமல் வாய் அடைத்துப் போனேன்” என்று பதிவிட்டுள்ளார்.சேமிப்பு எந்தளவுக்கு முக்கியமானது என்பதையே இது காட்டுவதாக இருப்பதாகவும் நளினி பதிவிட்டுள்ளார். தேவையற்ற விஷயங்களில் பணத்தை வீணாக்காமல், சரியாகப் பணத்தைச் சேமித்தால் இது சாத்தியம் என்பது எனக்கு அப்போது தான் புரிந்தது எனப் பதிவிட்டுள்ளார். அவரது இந்த போஸ்ட் உடனடியாக இணையத்தில் டிரெண்டாது.
நெட்டிசன்கள் பலரும் அந்த வீட்டு வேலை செய்யும் பெண்ணின் சேமிப்பு திறனைப் பாராட்டினார்கள். அதேநேரம் சிலர், 60 லட்சம் ரூபாய்க்கு சூரத்தில் எப்படி ஒரு 3BHK பிளாட் வாங்க முடியும் என்று ஆச்சரியப்பட்டனர். நெட்டிசன் ஒருவர், “60 லட்சத்துக்கு 3BHK கிடைக்குமா?” என்று பதிவிட்டிருந்தார். மற்றொருவர், “சூரத்தின் 60 லட்சம் ரூபாய்க்கு 3BHK என்பதை மட்டும் நம்ப முடியவில்லை” என்று குறிப்பிட்டார்.
மற்றொரு நெட்டிசன், “இதில் நீங்கள் ஏன் வாய் அடைத்துப் போகிறீர்கள்? யாராவது முன்னேறும்போது நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் தானே?” என்று கேட்டுள்ளார். அதற்குப் பதிலளித்த நளினி, “நான் அவருக்காக நிச்சயமாக மகிழ்ச்சி அடைகிறேன்! ஆனால் ஒரு சமூகமாக, இதுபோன்ற வேலைகளில் உள்ளவர்கள் எப்போதும் ஏழைகள் என்ற எண்ணத்தை நாம் கட்டமைத்துவிட்டோம். உண்மையில், அவர்கள் பண விஷயத்தில் மிகவும் புத்திசாலிகள். நாம் காபி, போன், விலையுயர்ந்த பொருட்கள் மற்றும் பயணங்களுக்காகச் செலவழிக்கும்போது, அவர்கள் புத்திசாலித்தனமாகப் பணத்தைச் சேமிக்கிறார்கள்” என்று எழுதினார். இது சமூக வலைத்தளங்களில் பயங்கர வைரல் ஆகி வருகிறது.