
இமாச்சலப் பிரதேசத்தில் சாலை விபத்தில் காயமடைந்த பிரபல பஞ்சாபி பாடகர் ராஜ்வீர் ஜவாண்டா, 12 நாட்கள் வென்டிலேட்டரில் தொடர் சிகிச்சையில் இருந்த நிலையில், நேற்று அவரது உயிர் பிரிந்தது. 1300 சிசி பைக்கில் அவர் வேகமாக சென்று கொண்டிருந்த போது, திடீரென நாய் ஒன்று குறுக்கே பாய்ந்ததால் நிலை தடுமாறி கீழே விழுந்து படுகாயமடைந்தார். தொடர்ந்து மொஹாலியில் உள்ள ஃபோர்டிஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு மருத்துவர்கள் உயிர்காக்கும் சிகிச்சை அளித்த போதும் பலனளிக்கவில்லை.