
கன்னடத்தில் ஒளிபரப்பாகும் “பிக் பாஸ்” நிகழ்ச்சி அதிரடியாக நிறுத்தப்பட்டுள்ளது. பெங்களூரு தெற்கு மாவட்ட நிர்வாக அதிகாரிகள், ஷோ நடந்துவந்த ஜாலிவுட் டேஸ் ஸ்டுடியோவுக்கு சீல் வைத்து மூடியுள்ளனர். நேற்று (அக்.6) அதிகாரிகள் நோட்டீஸ் கொடுத்தும் ஜாலிவுட் ஸ்டுடியோஸ் அதை ஏற்க மறுத்ததால், வருவாய் துறை அதிகாரிகள் போலீஸாருடன் சென்று, அங்கிருந்தவர்களை வெளியேற்றி, நிகழ்ச்சியை முழுவதுமாக நிறுத்தி உள்ளனர். ஆனால், எதற்காக இந்த நடவடிக்கை என்று இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை.