
தவெக தலைவர் விஜய்யின் சென்னை நீலாங்கரை வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த ஓட்டல் பணியாளரை போலீசார் கைது செய்துள்ளனர். இன்று (அக்., 09) அதிகாலையில் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்ட மர்ம நபர், விஜய் வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாக கூறியுள்ளார். உடனே அங்கு சென்ற வெடிகுண்டு செயலிழப்பு குழுவினர் தீவிர சோதனை நடத்தியதில் புரளி என்பது தெரிவந்தது. போலீசார் நடத்திய விசாரணையில் சென்னை ஓட்டல் பணியாளர் கைதாகியுள்ளார்.