பொதுவாகவே விநாயகரை வழிபடும்போது அனைவரும் பார்த்திருப்போம் விநாயகருக்கு அருகம்புல் மாலை அணிந்து இருப்பார்கள் அருகம்புல் மாலை ஏன் விநாயகருக்கு அணிகிறார்கள் என்று நம்மில் பலருக்கும் தெரியாது அதை பற்றி இந்த பதிவில் நாம் பார்க்கலாம்.
அனலாசுரன் என்ற அசுரன் தேவர்களை மிகவும் துன்புறுத்தி வந்தான். தன்னை எதிர்ப்பவர்களை அனலாய் மாற்றி த் தகித்து விடுவான் இவனை பிரம்மாவாலும் தேவேந்திரனாலும் அடக்க முடியவில்லை. அவர்கள் சிவ பார்வதியை சந்தித்து முறையிட்டனர் சிவனும் விநாயகருக்கு அந்த அரக்கனை அழித்து வரும்படி கட்டளையிட்டார். விநாயகரும் பூத கணங்களுடன் போருக்குச் சென்றார் அங்கு சென்றதும் அனலாசுரன் பூத கணங்களை எரித்து சாம்பல் ஆக்கினார் விநாயகர் அனலாசுரனுடன் மோதினார். ஆனால் அவனை வெற்றி கொள்ள முடியவில்லை. கோபத்தில் அவனை அப்படியே விழுங்கிவிட்டார். வயிற்றுக்குள் சென்ற அனலாசுரன் அதை வெப்பமடைய செய்தான்.




