Oplus_131072
ஒரு தடவை இந்த முட்டை மசாலா வைத்து பாருங்கள். இதேபோல் தினமும் செய்வீர்கள்.
ஒரு மிக்ஸி ஜாரில் ஒரு தக்காளி, இரண்டு சில்லி தேங்காய், 4 முந்திரி,
ஒரு டீஸ்பூன் சோம்பு,
ஒரு சின்ன துண்டு பட்டை,
ஒரு கிராம்பு,
ஒரு ஏலக்காய்,
அரைஸ்பூன் மிளகு, ஒரு ஸ்பூன் மல்லித்தூள் சேர்த்து நன்கு மையமாக அரைத்துக் கொள்ளவும்.
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி,
ஒரு பெரியவங்காயம்,
ஒரு பச்சைமிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்.
அரைஸ்பூன் இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து பிறகு, புதினா, ஒரு ஸ்பூன் மிளகாய்த்தூள் சேர்த்து அரைத்த விழுதைச் சேர்த்து 5 நிமிடம் கிளறவும். ஒரு டம்பளர் தண்ணீர், தேவையான அளவு உப்பு சேர்த்து கடைசியில் வேக வைத்த முட்டை சேர்த்து இறக்கினால் ரெடி.




