தருமபுரியில் தாய், 3 குழந்தைகள் கிணற்றில் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை..!!
தருமபுரி மாவட்டம் தொக்கம்பட்டி அருகே காணாமல் போன தாய் மற்றும் அவரது மூன்று குழந்தைகள் கிணற்றில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 19-ஆம் தேதி முதல் மாயமான அம்சா (35) மற்றும் அவரது மூன்று குழந்தைகளை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.




