தருமபுரி மாவட்டம் தொக்கம்பட்டி அருகே காணாமல் போன தாய் மற்றும் அவரது மூன்று குழந்தைகள் கிணற்றில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 19-ஆம் தேதி முதல் மாயமான அம்சா (35) மற்றும் அவரது மூன்று குழந்தைகளை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில், அப்பகுதியில் உள்ள கிணற்றில் நால்வரின் உடல்களும் கண்டெடுக்கப்பட்டன.
உடல்கள் கயிற்றால் கட்டப்பட்ட நிலையில் மீட்கப்பட்டதாகக் கூறப்படுவதால், இந்தச் சம்பவம் தற்கொலையா அல்லது கொலையா என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், உடல்கள் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில், விசாரணை முடிவுகளின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.




