
தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளதால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது. குறிப்பாக நாளை (நவம்பர் 13) சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகர் மற்றும் மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையை பொறுத்தவரை வெப்பநிலை அதிகபட்சமாக 30 டிகிரி செல்சியஸ் ஆகவும் குறைந்தபட்சம் 25 டிகிரி செல்சியஸ் ஆகவும் இருக்க கூடும் என்று கூறப்பட்டுள்ளது . அதே போல இன்றும் நாளையும் தமிழக கடலோர பகுதிகள், வங்கக்கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசும் என்பதால், மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.