
தமிழகத்தில் சென்னைக்கு அடுத்து முக்கியமான நகராட்சிகளில் ஒன்றாக கோவை மாநகராட்சி உள்ளது இது 257.04 சதுர கிலோமீட்டர் பரப்பு கொண்டதாக உள்ளது..
மாநகராட்சியில் தற்போது 100 வார்டுகள் உள்ளன, இவை நிர்வாக வசதிக்காக 5 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளன, கடந்த 2006 முதல் 2011 வரை கோவை மாநகராட்சியின் வாரர்களின் எண்ணிக்கை 72 ஆக இருந்தது தொடர்ந்து 2011 ஆம் ஆண்டு குறிச்சி குண்ணியமுத்தூர் கவுண்டம்பாளையம் ஆகிய மூன்று நகராட்சிகள் ஏழு பேரூராட்சிகள் ஒரு கிராம ஊராட்சி என 11 உள்ளாட்சிகள் அமைப்புகள் இணைக்கப்பட்டுள்ளன, இதற்குப் பிறகு பழைய 72 வார்டுகள் ஒருங்கிணைக்கப்பட்டு 60 வார்டுகளாக குறைக்கப்பட்டன அத்துடன் புதிதாக இணைக்கப்பட்டுள்ள 11 உள்ளாட்சி அமைப்புகளின் வார்டுகளும் மறுசீரமைப்பு செய்யப்பட்டு, 40 வார்டுகளாக உருவாக்கப்பட்டன ஆக மொத்தம் கோவை மாநகராட்சி வார்டுகளின் எண்ணிக்கை 72 இலிருந்து 100 ஆக உயர்ந்துள்ளது, கோவை மாநகராட்சியின் எல்லை விரிவாக்கம் செய்யப்பட்டு 14 ஆண்டுகள் கடந்துவிட்ட பின்னர் மீண்டும் எல்லையை விரிவாக்கம் செய்ய தமிழக அரசின் அறிவுறுத்தலின் பேரில் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி நிர்வாகம் அதற்கான பணிகளை மேற்கொண்டுள்ளது, மாநகராட்சி எல்லையை ஒட்டி ஐந்து கிலோ மீட்டர் a சுற்றுகளில் உள்ளாட்சி அமைப்புகளை மாநகராட்சி உடன் இணைக்க முடிவு செய்யப்பட்டு அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது,தற்போது நிலையில் ஒரு நகராட்சி நாலு பேரூராட்சிகள் 11 ஊராட்சிகள் என மொத்தம் 16 உள்ளாட்சிகள் அமைப்புகளை இணைத்து கோவை மாநகராட்சி எல்லை விரிவாக்கம் செய்யப்பட உள்ளது, இது பற்றி கோவை மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் கூறுகையில் கோவை மாநகராட்சியின் எல்லை விரிவாக்கம் தொடர்பான கருத்துரு தமிழக அரசின் பரிந்துரைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது அரசின் ஒப்புதல் கிடைத்த பின்னரே இத்து தொடர்பான அடுத்த கட்ட நடவடிக்கைகள் தீவிரமணியம் என்றார்..!!