இளநீர் Vs நெல்லிக்காய் ஜூஸ் இவற்றில் கோடையில் குடிக்க சிறந்தது எது..??

Oplus_131072

 

Tender Coconut Water Vs Amla Juice: கோடைக்காலம் என்பதால் சுட்டெரிப்பது போன்று வெளியே வெயில் கொளுத்தும். இந்த வெயிலில் சிறிது நேரம் சென்றாலே, உடல் சூடு பிடித்து நிறைய பேர் அவதிப்படுவார்கள். மேலும் கோடைக்காலம் வந்துவிட்டாலே நீரிழப்பு, உடல் சூடு மற்றும் வெப்பம் சார்ந்த நோய்களை அதிகம் சந்திக்க நேரிடும். இப்பிரச்சனைகளைத் தவிர்க்க வேண்டுமானால், உடலை குளிர்ச்சியாக்கும் மற்றும் உடல் சூட்டைக் குறைத்து உடலை நீரேற்றத்துடன் வைத்துக் கொள்ளும் உணவுகளையும், பானங்களையும் அதிகம் உட்கொள்ள வேண்டும்.

அப்படி கோடையில் உடல் சூட்டை குறைக்க தண்ணீரைத் தவிர, இரு விதமான பானங்களை மக்கள் அருந்துவார்கள். அதில் ஒன்று இளநீர் மற்றொன்று நெல்லிக்காய் ஜூஸ். என்னது நெல்லிக்காய் ஜூஸ் உடல் சூட்டை குறைக்குமா என்று சிலர் கேட்கலாம்.

ஆயுர்வேதத்தின் படி, நெல்லிக்காய் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுவதோடு, உடல் சூட்டைக் குறைக்கும் பண்புகளையும் கொண்டுள்ளன. சரி, இளநீர், நெல்லிக்காய் ஜூஸ் ஆகிய இரண்டில் எது உடலுக்கு அதிக குளிர்ச்சியைத் தரும் என்ற ஒரு சந்தேகம் இருக்கும். இப்போது இவ்விரண்டில் எது அதிக குளிர்ச்சியானது என்பதை அலசி ஆராய்வோம்.

இளநீரில் உள்ள சத்துக்களும்.. நன்மைகளும்.. இளநீரில் 95.5 சதவீதம் நீர் இருப்பதோடு, பொட்டாசியம், மக்னீசியம், கார்போஹைட்ரேட், கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, வைட்டமின் பி காம்ப்ளக்ஸ், வைட்டமின் சி, தாது உப்புக்கள், சில அமினோ அமிலங்கள் உள்ளன. அதுவும் இதில் உள்ள பொட்டாசியம் போன்ற எலக்ட்ரோலைட்டுகள் உடலுக்கு நீரேற்றத்தை அளிக்கிறது. வெயிலில் நீண்ட நேரம் அலைந்த பின், ஒரு இளநீரை குடித்தால், உடல் வெப்பம் குறைவதை நன்கு உணரலாம். அதனால் தான் கோடையில் உடல் சூட்டினால் அவதிப்படுபவர்களும், உடல் வறட்சியால் சிரமப்படுபவர்களும் இளநீரை தேர்வு செய்து குடிக்கின்றனர். நெல்லிக்காய் ஜூஸின் நன்மைகள் நெல்லிக்காய் ஏராளமான மருத்துவ குணங்களைக் கொண்டது என்பதை அனைவரும் அறிவோம். குறிப்பாக இதில் வைட்டமின் சி ஏராளமான அளவில் நிறைந்துள்ளன. இது உடலின் நோயெதிர்ப்பு சக்தியை மேம்படுத்த உதவும். அதுவும் கோடைக்காலத்தில் நெல்லிக்காய் ஜூஸை அருந்துவது, நீண்ட கால அடிப்படையில் உடல் வெப்பத்தைச் சமநிலைப்படுத்த உதவி புரியும்.

இளநீர் Vs நெல்லிக்காய் ஜூஸ் எது சிறந்தது? இவ்விரண்டின் குளிர்விக்கும் விளைவுகளை ஒப்பிட்டு பார்க்கும் போது, நெல்லிக்காய் ஜூஸ் உடலை குளிர்விக்க நீண்ட நேரம் எடுத்துக் கொள்கிறது. அதே சமயம் இளநீர் சட்டென்று உடலைக் குளிர்விக்கும். ஏனெனில் இளநீரில் உள்ள எலக்ட்ரோலைட்டுகளானது நீண்ட நேரத்திற்கு உடலை நீரேற்றத்துடன் வைத்திருக்க உதவுகிறது. நெல்லிக்காய் ஜூஸ், இளநீர் இரண்டையும் குடிக்கலாமா? நிச்சயம், இரண்டையும் தினசரி உணவில் சேர்த்துக் கொள்ளலாம். அதுவும் இளநீரை வெயில் கொளுத்தும் பகல் வேளையில் குடிப்பது சிறந்தது. இதனால் உடல் நீரேற்றத்துடன் இருக்கும். நெல்லிக்காய் ஜூஸை காலையில் எழுந்ததும் குடிப்பது நல்லது. இதன் மூலம் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியமும் மேம்படும். ஆனால் எப்போதும் எவ்வளவு ஆரோக்கியமானதாக இருந்தாலும் அளவாக உட்கொள்ள வேண்டும். குறிப்பாக ஏற்கனவே ஒருசில ஆரோக்கிய பிரச்சனைகளை கொண்டிருந்தால், தினசரி எடுக்கும் முன் மருத்துவரின் ஆலோசனையைப் பெற வேண்டும்.

Read Previous

தொடர்ந்து 30 நாட்கள் பட்டை தண்ணீர் குடித்தால் உடலில் நடக்கும் மேஜிக்.. நீங்களே ஷாக் ஆகிடுவீங்க..!!

Read Next

கிட்னியை கொஞ்ச கொஞ்சமாக காலி செய்யும் இந்தப் பழக்கங்கள்: எச்சரிக்கும் டாக்டர்கள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular