ஈரான் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா நடத்தி வரும் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,000-ஐ கடந்துள்ளது. ஈரானின் புரட்சிகர காவல்படை, போரின் முதல் 2 நாட்களிலேயே அமெரிக்காவின் 500-க்கு மேற்பட்ட வீரர்கள் கொல்லப்பட்டதாகக் கூறியுள்ளது. இஸ்ரேலில் 11 பேர் இறந்ததாக அந்நாடு தெரிவித்துள்ளது. போர் 6-வது நாளை எட்டியுள்ள நிலையில், அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைக்கு இடமில்லை என்றும் விரும்பும் வரை போரைத் தொடர்வோம் என்றும் ஈரான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




