கோடை காலத்தில் உடலை குளிர்ச்சியாகவும், நீரேற்றம் ஆகவும் வைத்திருக்க என்ன சாப்பிட வேண்டும் தெரியுமா..?? கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க..!!
கோடை காலம் அதாவது வெயில் காலம் ஆரம்பித்து விட்டது இந்த வெயில் காலத்தில் வெயிலை பொறுக்க முடியாமல் தவிப்பவர்கள் தான் அதிகமாக இருப்போம். இந்நிலையில் நம் உடலை இந்த வெயில் காலத்தில் குளிர்ச்சியாகவும் நீரேற்றமாகவும் வைத்துக்கொள்ள என்னென்ன சாப்பிட வேண்டும் என்பதைப் பற்றி நாம் இந்த பதிவில் பார்க்கலாம்.
வெயில் காலத்தை உடலை குளிர்ச்சியாகவும் நீரேற்றமாகவும் வைத்திருக்க நீர் சம்பந்தப்பட்ட பழங்கள் மற்றும் நீர் சத்து நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டும்.
எடுத்துக்காட்டாக தர்பூசணி, வெள்ளரி, தயிர், மோர், கீரை, ப்ரோக்கோலி, காலிஃப்ளவர் போன்ற நீர்ச்சத்து மற்றும் வைட்டமின் நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டும். அதுமட்டுமின்றி நீர்ச்சத்து மிக்க முலாம்பழம் மற்றும் முள்ளங்கி, நூல் கோல், பீர்க்கங்காய், புடலங்காய், மாதுளை, நுங்கு, இளநீர் போன்றவற்றையும் சாப்பிடுவதன் மூலம் உடலை குளிர்ச்சியாக வைத்துக்கொள்ள முடியும்.




