தமிழகத்தை முதலீட்டு மாநிலமாகவும் முதலீட்டாளர்களை உருவாக்கும் மாநிலமாகவும் மாற்றும் நோக்கத்தில் அமெரிக்காவிற்கு சென்றுள்ள தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் 500 கோடிக்கு ஒப்பந்தம் செய்துள்ளார்…
500 கோடி முதலீடு தொடர்பாக அமெரிக்காவின் கேட்டர் பில்லர் நிறுவனத்துடன் தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் முன்னிலையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது, மேலும் அமெரிக்கா சென்று உள்ள மு க ஸ்டாலின் தொழில் முதலீடுகளை ஈர்க்கும் பல்வேறு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு வருகிறார், அதன்படி கேட்டர் பில்லர் நிறுவனங்களுடன் திருவள்ளூர் கிருஷ்ணகிரியில் கட்டுமான கருவிகள் உற்பத்தி நிலையங்கள் விரிவுபடுத்த ஒப்பந்தம் கையெழுத்து போடப்பட்டுள்ளது, மேலும் தமிழகத்தை முதலீட்டர்களின் முன்னணி மாநிலமாக உயர்த்த வேண்டும் என்றும் தமிழகத்தில் இருக்கும் இளைஞர்களுக்கு தமிழகத்திலேயே முன்னுரிமை வழங்கும் விதமாக அவர்களுக்கு தொழில் வளத்தை எடுத்துரைக்கும் விதத்திலும் தமிழகம் விளங்கும் என்றும் மக்களின் முதல்வர்மு க ஸ்டாலின் கூறியுள்ளார்..!!




