உணவு பழக்க வழக்கங்கள் பழமொழி வடிவில்..!!

நாம் சாப்பிடக்கூடிய உணவில் ஆரோக்கியமும் இருக்கிறது ஆபத்து தன்மையும் நிறைந்திருக்கிறது, எந்த உணவும் அளவுக்கு அதிகமானால் அது உடலுக்கு ஆபத்து தரக்கூடியதாக அமையும், இப்படி இருக்கும் பட்சத்தில் அளவோடு உண்டால் உணவே சிறந்த மருந்தாக அமைகிறது…

சீரகம் இல்லா உணவு சிறக்காது, தன் காயம் காக்க வெங்காயம் போதும், வாழை வாழவைக்கும், அவசர சோறு ஆபத்து, இரைப்பை புண்ணுக்கு எலுமிச்சை சாறு, ரத்த கொதிப்புக்கு அகத்திக்கீரை, இரும்பலை போக்க வெந்தியக்கீரை, உஷ்ணம் தவிர்க்க கம்பங்களி, கொழுப்பை குறைக்க பன்னீர் திராட்சை, சித்தம் தெளிய வில்வம், சிறுநீர் கடுப்புக்கு அன்னாசி, பூட்டை தணிக்க கருணைக்கிழங்கு, ஜீரண சக்திக்கு சுண்டைக்காய், தலைவலி நீங்க முள்ளங்கி சாறு, தேனுடன் இஞ்சி சேர்த்து அருந்தி வந்தால் ரத்தம் தூய்மை அடையும், மூல நோய்க்கு வாழைப்பூ கூட்டு, வாந்திக்கு மருந்து மணத்தக்காளி, வாத நோய்க்கு அகத்திக்கீரை, வாய் துர்நாற்றம் போக்க ஏலக்காய், பருமன் குறைய முட்டைக்கோஸ், பித்தம் தணிக்க நெல்லிக்காய், குடல்புண் நலம் பெற அகத்திக்கீரை, மேலும் பழங்கள் காய்கறிகள் உடலுக்கு ஆரோக்கியம் தருகிறது எல்லாவற்றையும் அளவோடு எடுத்துக் கொள்ளும்போது உடல் ஆரோக்கியமாகவும் புத்துணர்ச்சியாகவும் இருக்கிறது..!!

Read Previous

கொழுப்பை நீக்கும் மாதுளையின் மகத்துவம்..!!

Read Next

நெய் சாப்பிடும் முறை அதனால் ஏற்படும் நன்மைகள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular