பரோட்டா சால்னாவால் உரிமையாளருக்கு நடந்த விபரீதம்..!! அச்சத்தில் பிரியாணி கடை ஊழியர்கள்..!!!
அபிதா பிரியாணி கடை என்பது கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள உக்கடம் என்ற பகுதியில் உள்ளது. இந்த கடை அப்பகுதியில் மிகவும் பிரபலமான கடையாகும். இந்த கடைக்கு சாப்பிட வந்த இரண்டு நபர்கள் புரோட்டா ஆர்டர் செய்துள்ளனர். இந்த இரண்டு நபரும் புரோட்டாவிற்கு உள்ள சால்னாவை கேட்டு அங்கிருந்த ஊழியர்களிடமும் கடையின் உரிமையாளர் அமானுல்லா அவர்களிடம் தகாத வார்த்தைகளால் பேசி கடையில் தகராறில் ஈடுபட்டுள்ளனர். முதலில் இந்த இரண்டு நபர்களும் சால்னாவை கேட்டு அங்கே வேலை பார்க்கும் ஊழியர்களிடம் தகராறு ஈடுபட்டுள்ளதால். அவர்கள் கடையின் உரிமையாளர் அமானுல்லா அவர்களை அழைத்து வந்தார்கள். கடையின் உரிமையாளர் அந்த இரண்டு நபர்களிடமும் முடிந்த அளவிற்கு பணிவாக பேசி அவர்களுக்கு என்ன வேணும் என்பதை கேட்க முயற்சித்துள்ளார். ஆனால் அந்த நபர்களோ அவரை தகாத வார்த்தைகளால் மிகவும் கோபமாக பேசி அந்த கடமையின் உரிமையாளரான அமானுல்லா அவர்களை கத்தியால் குத்தி விட்டனர். இதைக் கண்டு அந்த கடையில் உள்ள ஊழியர்களும் அங்கு சாப்பிட வந்த மற்றவர்களும் மிகவும் பதட்டம் அடைந்தனர். இந்நிலையில் இந்த சம்பவத்தை அங்கு வேலை செய்யும் ஊழியர் ஒருவர் விரைந்து காவல்துறைக்கு தகவல் அளித்து அவர்களை கடைக்கு வரவைத்துள்ளார். என் நிலையில் காவல்துறையினர் கடையின் உரிமையாளர் அமானுல்லாவை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில், காவல்துறையினர் தகராறு ஈடுபட்ட அந்த இரண்டு நபர்களையும் பிடித்து கைது செய்து விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த கடையில் நடந்த இந்த செயல் அப்பகுதியில் உள்ள மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.




