Oplus_131072
இந்த பாம்பே சட்னி ஒன்னு போதுங்க 😋 இட்லி தோசை பூரி சப்பாத்தி னு எது செஞ்சாலும் தொட்டுக்கலாம்.
ஆனா இதுக்கு ஏன் பாம்பே சட்னி என்று பெயர் வந்தது என்றால் எனக்கு தெரியல 😄 உங்களுக்கு தெரிஞ்சா கமெண்ட்ல சொல்லுங்க.
இரண்டு மேசைக்கரண்டி கடலைமாவை தண்ணீரில் கரைத்து எடுத்துக் கொள்ளவும்
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு உளுத்தம் பருப்பு கருவேப்பிலை போட்டு தாளித்து ஒரு துண்டு இஞ்சியை தட்டி சேர்க்கவும்
பச்சை மிளகாய் ஒன்றை கீறி சேர்க்கவும்
பொடியாக வெட்டிய பெரிய வெங்காயம் ஒன்று சேர்த்து வதக்கவும்
பெருங்காயத்தூள் ஒரு தேக்கரண்டி சேர்க்கவும் வெங்காயம் நன்கு வதங்கியவுடன் ஒரு தக்காளியை பொடியாக நறுக்கி சேர்க்கவும்
மஞ்சள் தூள் அரை தேக்கரண்டி உப்பு தேவையான அளவு சேர்த்து தக்காளி நன்கு வதங்கியவுடன்
அரை கப் தண்ணீர் சேர்க்கவும்.
கரைத்து வைத்திருந்த கடலை மாவு சேர்த்து தேவைப்பட்டால் மீண்டும் தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க விடவும்
கரம் மசாலா ஒரு தேக்கரண்டி, நெய் ஒரு தேக்கரண்டி மற்றும் மல்லி இலைகளும் தூவி ஒரு கொதி விட்டு இறக்கினால் சுவையான பாம்பே சட்னி தயார்.




