சிறு உருளை மிளகு வறுவல் இப்படி செஞ்சு கொடுங்க..!! பெரியவர்களில் இருந்து குழந்தைகள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவாங்க..!!
சிறு உருளை மிளகு வறுவல் செய்வதற்கு 200 கிராம் சிறிய உருளைக்கிழங்கை நன்கு கழுவி சிறிய துண்டுகளாக வெட்டவும் தோலை தேவைப்பட்டால் உரித்து கொள்ளலாம். பாத்திரத்தில் தண்ணீருடன் சிறிதளவு உப்பு சேர்த்து நன்றாக கலக்கவும் பிறகு வெட்டி வைத்த உருளைக்கிழங்கு துண்டுகளை சேர்த்து 10 நிமிடங்கள் ஊற விடவும். வாணலியில் நாலு ஸ்பூன் எண்ணெய் விட்டு ஒரு ஸ்பூன் கடுகு உளுந்தம் பருப்பு சேர்த்து நன்றாக பொரிந்த உடன் சிறிதளவு கறிவேப்பிலை மற்றும் தோல் சீவிய இஞ்சி துண்டுகள் இரண்டு பல் பூண்டு சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். பிறகு உருளைக்கிழங்கு துண்டுகளை சேர்த்து அரை டீஸ்பூன் சீரகத்தூள் ஒரு டீஸ்பூன் மிளகுத்தூள் தேவையான அளவு உப்பு சேர்த்து அடுப்பை சிறு தீயில் வைத்து வதக்க வேண்டும். தண்ணீர் எதுவும் சேர்க்கக் கூடாது. 10 நிமிடங்கள் கழித்து வெந்த பிறகு இறுதியாக அரை ஸ்பூன் மிளகுத்தூள் சேர்த்து ஒரு நிமிடம் நன்றாக வதக்கி விட்டு அடுப்பை ஆஃப் செய்தால் உருளைக்கிழங்கு மிளகு வறுவல் ரெடி.




