திடீர் விருந்தினருக்கு இந்த இட்லி மாவு போண்டா பத்து நிமிடத்தில் செஞ்சு கொடுத்து அசத்துங்க..!!

திடீர் விருந்தினருக்கு இந்த இட்லி மாவு போண்டா பத்து நிமிடத்தில் செஞ்சு கொடுத்து அசத்துங்க..!!

திடீரென நம் வீட்டிற்கு விருந்தாளிகள் வரும் பொழுது பத்து நிமிடத்தில் செய்யக்கூடிய இந்த இட்லி மாவு போண்டாவை செஞ்சு கொடுத்து அசத்துங்க. இது எப்படி செய்வது என்பதை பற்றி இந்த பதிவில் நாம் பார்க்கலாம்.

இட்லி மாவு போண்டா செய்ய தேவையான பொருட்கள்:

இட்லி மாவு ஒரு கப்
மைதா மாவு கால் கப்
வெங்காயம் ஒன்று
பச்சை மிளகாய் இரண்டு
சமையல் சோடா ஒரு சிட்டிகை
எண்ணெய் பொறிப்பதற்கு தேவையான அளவு.

வெங்காயம் பச்சை மிளகாயை பொடியாக நறுக்கவும் இதை இட்லி மாவுடன் சேர்க்கவும் மற்றும் மைதா மாவையும் இதனுடன் சேர்த்து சிறிதளவு சமையல் சோடாவையும் சேர்த்து நன்றாக கலக்கி வாணலியில் எண்ணைய் காய விட்டு சின்ன சின்ன போண்டாவாக கிள்ளி போட வேண்டும். நன்கு வேகவிட்டு எடுத்தால் இட்லி மாவு போண்டா ரெடி.

Read Previous

சமைக்கும் முன் அரிசியை ஊற வைப்பது சரியா இல்லை தவறா..??

Read Next

கேழ்வரகு – தாய்ப்பாலுக்கு பின் தரப்படும் முதல் திட உணவு இதுதான்..!! தாய்மார்களே கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular