அல்வா என்றாலே சிறியவர்களில் இருந்து பெரியவர்கள் வரைக்கும் அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். அல்வாவின் சுவை நாக்கில் எச்சி ஊற வைக்கும் வகையில் அவ்வளவு ருசியாக இருக்கும். என்பது அனைவருக்கும் தெரியும். அல்வாவில் பல வகைகள் உள்ளன. கோதுமை அல்வா திருநெல்வேலி அல்வா திருநெல்வேலி இருட்டுக்கடை அல்வா பூசணிக்காய் அல்வா என பல வகைகள் இருக்கிறது. இந்நிலையில் பூசணிக்காய் அல்வா செய்வது எப்படி என்பதைப் பற்றி இந்த பதிவில் நாம் பார்க்கலாம்.
செய்முறை :
பூசணிக்காயைத் தோல் சீவித் துருவிக் கொள்ளவும். முந்திரியை உடைத்து இரண்டு ஸ்பூன் நெய் விட்டு பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றி அடுப்பில் வைக்கவும். பால் நன்கு கொதிக்கும்போது பூசணிக்காயைப் போட்டு மூடி வேக வைக்க வேண்டும்.
பூசணிக்காய் பாதி வேகும் போது மெதுவாக கிளறிவிடவும். நன்றாக வெந்து குழைந்து வரும்போது தேவையான அளவிற்கு சர்க்கரையை போட்டு நன்கு கலக்கி விடவும்.
சர்க்கரையை போட்டதும் அடிப்பிடித்துக் கொள்ளாதவாறு அடிக்கடி கிளறிக் கொண்டே இருக்கவும். பின்னர் நெய்யைச் சிறிது சிறிதாக ஊற்றி கிளற வேண்டும். அதனுடன் வறுத்த முந்தரியை போட்டுக் கிளறவும். சுவையான அல்வா ரெடி.



