கோடை காலத்தில் நாம் நம் உடல் குளிர்ச்சி அடைய பல உணவுகளை சாப்பிடுவது உண்டு. அதில், வெள்ளரிக்காய் நம் அனைவரின் முதல் தேர்வாகும். அந்த வெள்ளரிக்காயை ஜூஸ் போட்டு குடித்தால் ஏற்படும் நன்மைகள் என்னவென்று உங்களுக்கு தெரியுமா ?
வெள்ளரிக்காய் கோடை காலத்தில் நமது முதல் தேர்வாக இருப்பதின் காரணம் அதில் உள்ளடங்கிருக்கும் ஆரோக்கியமே. மேலும், மற்ற உணவுகளை காட்டிலும் வெள்ளிரிக்காய் நமது உடலை குளிர்ச்சி படுத்துவதில் மிகுந்த ஆற்றல் உடையது.
இந்த கடும் வெயில் காலத்தில், நம் உடலை புத்துணர்ச்சியாக வைத்து கொள்ளும் இந்த வெள்ளரிக்காய். மேலும், நம் உடலில் இருக்கும் நச்சுத்தன்மையை அகற்றி கல்லீரலுக்கு மிகுந்த ஆரோக்கியத்தை கொடுக்கிறது. உடற்பயிற்சியின் மீது ஆர்வம் காட்டுபவரும், உடல் எடையை குறைக்க நினைப்பவரும், வெள்ளரிக்காயை சாப்பிடுவது வழக்கம். அதை, அப்படியே உண்பதிற்கு பதிலாக ஜூஸ் போடு குடித்தால் மிகவும் நல்லது.
இந்த வெள்ளரிக்காய் ஜூஸ், செரிமானத்திற்கு உதவி செய்து அதில் இருக்கும் பிரச்சனைகளை, தவிர்க்கவும் வலிவகிக்கிறது. ஆகையால், நமது உடலை ஆரோக்கியமாகவும் ஊட்டச்சத்து உடையதாகவும் மாற்ற வெள்ளரிக்காய் ஜூஸ் குடிக்கலாம்.
எனவே பல்வேறு ஆரோக்கியமும் மருத்துவ குணங்களும் நிறைந்த வெள்ளரிக்காய் ஜூஸ் குடித்து உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.




