சென்னை மதுரவாயல் தொகுதிக்குட்பட்ட போரூர் காரம்பாக்கம் பகுதியில் அதிமுக பிரமுகர் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. திமுகவினர் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்வதை தடுத்ததால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. திமுகவினர் தன்னை தாக்கியதாக அதிமுக பிரமுகர் நீலமேகம் போலீசில் புகார் அளித்த நிலையில், தப்பியோடியவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.




