என்னதான் நாம் வீட்டில் வகைவகையாக செய்து கொடுத்தாலும் ஹோட்டலில் இருக்கும் சுவை மாதிரி செஞ்சு கொடு என்று கேட்கும் நபர்கள் தான் வீட்டில் அதிகம். அந்த வகையில் ஹோட்டலில் செய்வது போல் வெண்பொங்கல் வீட்டிலேயே சுவையாக எப்படி செய்வது என்பதை பற்றி இந்த பதிவில் நாம் பார்க்கலாம்.
ஒரு குக்கரில் 1 டம்ளர் பச்சைஅரிசி அதே டம்ளர் பாதிஅளவு பாசிப்பருப்பு சேர்த்து நன்கு கழுவி அதில் 5 டம்பளர் அளவு தண்ணீர் சேர்க்கவும்
அதனுடையே 1 டீஸ்பூன் சீரகம் , 3 பின்ச் அளவு பெருங்காயத்தூள் , 2 பின்ச் இஞ்சி, உப்பு தேவையான அளவு , சேர்த்து 5 விசில் குழைந்து வேகவைத்து எடுத்துக்கொள்ளுங்கள்
கடைசியாக நெய் , எண்ணெய் சேர்த்து துருவிய இஞ்சி , மிளகு , சீரகம் , முந்திரி , சேர்த்து தாளித்து 5 நிமிடம் கழித்து கிண்டிவிட்டு சாப்பிட்டு பாருங்கள்



