ஐபிலில் ஆரம்பித்து, சூடு பிடித்து வரும் நிலையில் நேற்று இரவு 7:30 மணியளவில் கொல்கத்தா அணிக்கும் ஹைதராபாத் அணிக்கும் கொல்கத்தாவில் போட்டி நடந்து முடிந்தது. இதில் டாஸ் வென்ற ஹைதராபாத், முதலில் பௌலிங் செய்வதாக முடிவெடுத்தது. கடந்த போட்டியில் ஹைதெராபாத் அணி தோல்வியை சந்தித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
முதலில் பேட்டிங் ஆடிய கொல்கத்தா அணியின் வீரர்கள் 200க்கு 6 விக்கெட்டுகளை விட்டு தனது பேட்டிங்கை முடித்தது. இதில், வெங்கடேஷ் ஐயர் என்னும் வீரர் 60 ரன்கள் எடுத்து அசத்தினார். மற்ற வீரர்களும் அவருக்கு கய் கொடுத்து அசத்தினர். பௌலிங்கில் ஹைதராபாத் அணி சற்று சுமாரான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அதில் சிமர்ஜீத் சிங்கை தவற மற்ற பந்துவீச்சாளர்கள் தலா 1 விக்கெட்டுகளை எடுத்தனர்.
அடுத்து பேட்டிங் ஆட இறங்கிய ஹைதராபாத் அணி சரியாக விளையாடவில்லை. ஹைதெராபாத் அணியின் வீரர் க்ளஸன் 33 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் சரியான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. இறுதியில் ஹைதெராபாத்தால் வெறும் 120 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. இதுவரை கொல்கத்தா அணி கடந்த 5 போட்டிகளாக ஹைதராபாத்தை வென்றுள்ளது. கடந்த மூன்று போட்டிகளாக தோல்வியை சந்தித்து புல்லிபட்டியலில் கடைசி இடத்தில் இருக்கிறது ஹைதராபாத் அணி.




