இனி ஆபரேஷன் தேவையில்லை..!! கண் ஆரோக்கியமாக இருக்க அற்புதமான வழிகள் இதோ..!!
இன்றைய காலகட்டத்தில் பலருக்கும் கண்களில் ஏதாவது பிரச்சனை ஏற்பட்டு பார்க்கும் திறன் குறைகிறது. ஒரு சிலருக்கு இந்த பிரச்சினையால் கண்களில் ஆபரேஷன் கூட செய்யும் நிலைமை வருகிறது. இந்நிலையில் கண்களை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள நாம் பின்பற்ற வேண்டிய வழிகள் என்னென்ன என்பதை தற்போது நாம் பார்க்கலாம்.
பொதுவாகவே கண்களுக்கு அதிகம் சத்து தரக்கூடியது மீன் என்று சொல்வார்கள். இந்நிலையில் சால்மன் மீன் சாப்பிடுவது கண்களுக்கு ஆரோக்கியத்தை தரும். ஏனென்றால் இந்த மீனில் உள்ள புரதம் மற்றும் கொழுப்புச்சத்து அதிகம் நிறைந்துள்ளது. அதுமட்டுமின்றி இதில் உள்ள ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் கண்களுக்கு மிகவும் ஆரோக்கியமானது. இந்த மீனை சாப்பிடுவதன் மூலம் கண்கள் தொடர்பான அனைத்து வகையான பிரச்சனைகளிலிருந்தும் விடுபடலாம். அதுமட்டுமின்றி இறால் உட்கொள்வதன் மூலமும் கண்களை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள முடியும். பீட்டா கரோட்டின் உங்கள் கண்களுக்கு மிகவும் நன்மை பயக்கும். உண்மையில் நம் உடல் பீட்டா கரோட்டின் வைட்டமின் ஏ ஆகா மாற்றுகிறது. இது நம் கண்களுக்கு நேரடியாக நன்மை பயக்கும். இது கண் புரை மற்றும் நீரிழிவு போன்ற தீவிர நோய்களின் அபாயத்தை குறைத்து அந்த நோய்களிலிருந்து நம்மை பாதுகாக்கும். இந்நிலையில் பீட்டா கரோட்டின் ஆரஞ்சு மற்றும் இனிப்பு உருளைக்கிழங்கு ஏராளமாக இருப்பதால் இதை சாப்பிடுவதன் மூலமும் கண்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள முடியும்.



