சராசரி மனிதர்கள் அனைவரின் வீட்டிலும் நிச்சயமாக கடன் தொல்லை என்பது இருக்கும். இந்த கடன் தொல்லையிலிருந்து எப்படி மீள்வது என்று பலர் யோசித்து வருவார்கள். எவ்வளவுதான் வீட்டில் பணம் சேர்ந்தாலும் கடனுக்கு வட்டி கட்டியே ஆயுள் போகும் சூழலும் இங்கு அதிகமாக தான் இருக்கிறது. இப்படிப்பட்ட கடன் தொல்லையிலிருந்து மீள்வதற்கு இதை செய்து பாருங்கள்.
காலையில் எந்திரித்து ஒரு சில விஷயங்களை நினைத்து ஒரு சில செயல்களை செய்தால் அது நிச்சயமாக நடைபெறும் என்று நமக்கு நன்றாகவே தெரியும். இந்த கடன் தொல்லையிலிருந்து மீள்வதற்கு ஒரு மந்திரம் இருக்கிறது. இந்த மந்திரத்தை காலையில் தினமும் பிரம்ம முகூர்த்த வேலையில் கூறி வந்தால் பல நன்மைகள் கிடைக்கும்.
இது விநாயகரின் மந்திரமாகும். உங்களுக்கு கடன் தொல்லை அதிகமாக இருந்தால் நீங்க இந்த மந்திரத்தை நிச்சயமாக சொல்லுங்கள். ‘ஓம் நமோ பகவதே ஏகதம்ஷ்ட்ராய, ஹஸ்தி முகாய, லம்போதராய, உச்சிஷ்ட மகாத்மனே ஆம் ஹ்ரோம் ஹ்ரீம் கம் கேகே ஸ்வாஹா’




