மார்ச் மாதம் முதல் இருந்தே கோடை வெயில் தாக்கம் அதிகமாகவே இருக்கிறது. இந்த வெயிலினால் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். என்னதான் அவ்வப்போது மழை பெய்தாலும் மற்ற நேரங்களில் இந்த வெயிலை யாராலும் தாங்கிக் கொள்ள முடிவதில்லை. இருந்தாலும் வேலைக்கு செல்லும் நபர்கள் இதை தாங்கிக் கொண்டுதான் ஆக வேண்டும். அப்படி இருக்க இன்று வானிலை ஆய்வு மையத்திலிருந்து ஒரு எச்சரிக்கை வந்துள்ளது.
தமிழகத்தில் இன்று வெப்ப அலை வீசும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் காலை 11:00 மணி முதல் மாலை 4 மணி வரை பொதுமக்கள் யாரும் வெளியே வரக்கூடாது என்றும் எச்சரித்துள்ளது. மதிய நேரங்களில் கடுமையான வேலை எதையும் செய்ய வேண்டாம் என்றும் வெயிலில் வேலை செய்யும் நபர்கள் மதியம் ஓய்வெடுக்க வேண்டும் என்றும் வானிலை மையம் எச்சரித்துள்ளது.
மேலும் இந்த வெயிலின் தாக்கத்தின் மூலம் ஏற்படும் பாதிப்புகளை கட்டுப்படுத்த அவசரகால மருந்து பொருள்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளது.




