தமிழகத்தில் கடந்த சில நாட்களாக அதிமுக பாஜக கூட்டணியை பற்றி தான் அதிகமாக அனைவரும் பேசி வருகின்றனர். இந்தக் கூட்டணி அமைந்ததில் சிலர் மகிழ்ச்சியில் இருந்தாலும் பலர் விமர்சித்து வந்துள்ளனர். இந்தக் கூட்டணியின் காரணமாக பலர் அதிமுகவில் இருந்தும் பாஜகவில் இருந்தும் விலகியது நம் அனைவருக்கும் நன்றாகவே தெரியும். ஆனால் இந்த கூட்டணியில் ஏற்பட்ட ஒரு சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் நயினார் நாகேந்திரன் அவர்கள்.
அதாவது இந்த கூட்டணி அமைந்த போது அமித்ஷா அவர்கள் ஆட்சியில் பங்கு என பேசியதாக தகவல் வெளியாகிறது. இதனால் அதிமுகவினர் பெரும் அதிருப்தியை அடைந்தனர். அதன் பிறகு உடனடியாக எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் கூட்டணி மட்டுமே என அதிகாரப்பூர்வமாக தெரிவித்திருந்தார்.
இப்பொழுது இதைத்தொடர்ந்து நயினார் நாகேந்திரன் அவர்கள் அமித்ஷா ஆட்சியில் பங்கு என தெரிவிக்கவில்லை என்றும் கூட்டணி மட்டுமே என்றும் வெளிப்படையாக தெரிவித்துள்ளார். இதனால் இந்த கூட்டணிக்கு ஏற்பட்ட புகைச்சல் சற்று அடங்கியிருக்கிறது.



