தமிழக வெற்றி கழக கூட்டணி கட்சிகள் யார்..!! அதைப் பற்றி அறிவித்த ஆதார் அர்ஜுனா..!!

தமிழ் சினிமா உலகில் கலக்கி வரும் தளபதி விஜய் அவர்கள் சொந்தமாக கட்சி ஒன்றை ஆரம்பித்து அதற்கு தமிழக வெற்றி கழகம் என பெயர் வைத்து கடந்த வருடம் பிப்ரவரி மாதம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார். இதற்கு அவரது ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்து வரவேற்றனர். மேலும் பலர் இவரை விமர்சனம் செய்தும் வந்தனர்.

அதன் பின்பு நடந்த மாநாட்டில் அவர் பேசியது ஒரு வாரத்திற்கே பேசும் பொருளாக மாறியது. பல கட்சிகள் இவர் நாடகம் போடுகிறார் என்றும் இறுதியில் பாஜக உடனோ அல்லது திமுக உடனோ கூட்டணி வைப்பார் என்றும் கூறி வந்தனர். ஆனால் அவரது அடுத்தடுத்த பேச்சுக்கள் அதற்கு வாய்ப்பில்லை என்று வெட்ட வெளிச்சம் போட்டு காட்டியது. அதன் பின்பு அதிமுகவுடன் அவர் கூட்டணி வைப்பார் என்று அனைவராலும் யூகிக்கப்பட்டது. ஆனால் அதிமுகவோ பாஜகவுடன் கூட்டணி வைத்தது நம் அனைவருக்கும் தெரியும்.

இதைப் பற்றி பேசிய கட்சியின் முக்கிய புள்ளியான ஆதவ் அர்ஜுனா அவர்கள் பாஜகவுடன் தமிழக வெற்றி கழகம் எப்போதும் கூட்டணி வைக்காது என்றும் தங்களது கூட்டணி கட்சிகளை டிசம்பர் மாதம் தெரிவிப்போம் என்றும் கூறியுள்ளார். மேலும் அந்தக் கூட்டணியை வைத்து திமுகவின் ஓட்டுகளை கைப்பற்றுவோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Read Previous

மனித உடலை பாதுகாக்க சித்தர்கள் சொன்ன உணவு முறைகள் இதுதான்..!! கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க..!!

Read Next

IPL 2025..!!ஐபிஎல் இல் களமிறங்கிய 14 வயது சிறுவன், அவுட் ஆனதும் அழுது கொண்டே திரும்பி சென்றான்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular