நல்லெண்ணெய் சமையலுக்கு பயன்படுத்தலாமா..?? இல்லை பயன்படுத்தக்கூடாதா..??
எள்ளிலிருந்து எடுக்கும் இந்த எண்ணெய் தான் நல்லெண்ணெய் இதை தாராளமாக சமையலுக்கு பயன்படுத்தலாம். இந்த நல்லெண்ணெயை சமையலுக்கு பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகள் ஏராளம். நல்லெண்ணெயில் சமைத்த உணவுகள் மிகவும் சுவை மிகுந்ததாக இருக்கும் கல்லீரலை வலிமையாக்க இது உதவுகிறது. எலும்புகளின் வளர்ச்சிக்கும் மிகவும் உதவுகிறது. மன அழுத்தம் படபடப்பு நீங்க இந்த எண்ணெயில் சமைத்து சாப்பிடுங்கள். உடல் சூடு குறையும் உடல் மனம் உற்சாகமாக இருக்கும் நல்லெண்ணெய் வைத்து ஆயில் புல்லிங் செய்யலாம். தொடர்ந்து தலைக்கு தேய்த்து வந்தால் முடி அடர்த்தியாகவும் நீளமாகவும் வளரும். அதுமட்டுமின்றி இந்த நல்லெண்ணையை தேய்த்து குளிப்பதன் மூலம் உடல் குளிர்ச்சி அடையும் என கூறப்படுகிறது.




