மீன் குழம்பு செய்ய தெரியாதவர்கள் கூட ஈஸியா மீன் குழம்பு செய்ய இந்த பதிவை மட்டும் படிங்க போதும்..!!

 

ஒரு கிலோ கட்லா மீன் சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும். எந்த மீன் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். மிளகாய்த்தூள் மூன்று தேக்கரண்டி, மஞ்சள் தூள் ஒரு தேக்கரண்டி, உப்பு ஒருத் தேக்கரண்டி சேர்த்து நன்கு கலந்து அரை கிலோ மீனில் பிரட்டி வைக்கவும்.தோசை தவாவில் எண்ணெய் ஊற்றி மீனை வறுத்து எடுக்கவும்.மீன் குழம்பு

நான்கு தக்காளி அரைத்து எடுத்துக் கொள்ளவும்.நெல்லிக்காய் அளவு புளியை கரைத்து எடுத்துக் கொள்ளவும். ஒரு கடாயில் தேங்காய் எண்ணெய் சேர்த்து வெந்தயம், கருவேப்பிலை போட்டு தாளித்து பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் ஒரு கைப்பிடி சேர்த்து நன்கு வதக்கவும். இரண்டு பச்சை மிளகாய் கீறி சேர்க்கவும். வெங்காயம் வதங்கியுடன் கரைத்து வைத்திருந்த புளியும் அரைத்த தக்காளியும் சேர்க்கவும். மஞ்சள் தூள் அரை தேக்கரண்டி, மிளகாய்த்தூள் இரண்டு தேக்கரண்டி, மல்லித்தூள் இரண்டு தேக்கரண்டி, மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து எண்ணெய் பிரிந்து வரும் வரை நன்கு கொதிக்க விடவும். பிறகு அரை கிலோ மீனை சேர்த்து மூடி போட்டு 10 முதல் 20 நிமிடம் குறைந்த தீயில் வைத்து கொதிக்க விடவும்.கருவேப்பிலை மேலே தூவி இறக்கவும்.

Read Previous

பல நோய்களுக்கான ஒரே மருந்து இதுதான்..!! கண்டிப்பாக அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு..!!

Read Next

ரத்தத்தின் சர்க்கரையின் அளவு அதிகரிப்பதே சர்க்கரை நோய்..!! சர்க்கரை நோயினால் உடலில் உண்டாகும் பாதிப்புகள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular