வயிற்றில் பூச்சி உருவாகினான் மாத்திரைகள் தான் இப்போது நாம் சாப்பிட்டு வருகிறோம். ஆனால் இயற்கையாகவே வேப்பம்பூ அதை மிக சுலபமாக அழித்துவிடும். ஆகையால் இன்று வேப்பம்பூ ரசத்தை எப்படி செய்வது என்று தெளிவாக இந்த பதிவில் காண்போம்.
தேவையான பொருட்கள்:
வேப்பம்பூ – கைப்பிடி அளவு,
புளி – நெல்லிக் காய் அளவு,
கடுகு – ஒரு கரண்டி,
காய்ந்த மிளகாய் – 2,
பெருங்காயத்தூள் – சிறிதளவு,
எண்ணெய் – ஒரு கரண்டி,
உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
வேப்பம்பூவை எண்ணெயில் சேர்த்து வதக்கி எடுத்துக் கொள்ளவும். ஒரு கடாயை எடுத்து அடுப்பில் வைத்து எண்ணெய் கடுகு, மிளகு சேர்த்து தாளித்து புளிக்கரைசல் மற்றும் உப்பு சேர்த்து கொதிக்க வைக்கவும்.
கொதித்த பிறகு வருத்திருக்கும் வேப்பம் பூவை சேர்த்து பெருங்காயத்தூளையும் சேர்த்து கொதிக்க வைத்து இறக்கவும். இறக்கும்போது சிறிதளவு கொத்தமல்லி தலைகளை தூவவும். அவ்வளவுதான் சத்தான மற்றும் சுவையான வேப்பம் பூ ரசம் தயார்.



