உடல் பருமன் என்பது நிறைய பேருக்கு இருக்கும் ஒரு பிரச்சனையாக இப்போது மாறி இருக்கிறது. இதனால் பலரும் உடற்பயிற்சி செய்து உடலை குறைக்க நினைக்கின்றனர். ஆனால் சிலர் இதை கண்டுகொள்ளாமல் அப்படியே விட்டுவிடுகின்றனர். அப்படி செய்வதனால் என்னென்ன பிரச்சனைகள் வரும் என்று இந்த பதிவில் தெளிவாக காண்போம்.
உடலில் தங்கும் கொழுப்புகள் குடலுக்கு அருகில் மற்றும் உறுப்புகளைச் சுற்றி நேரடியாகப்படுகிறது. இதனால் இந்த உறுப்புகளுக்கு தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இதனால் நீரிழிவு நோய்கள் இதய நோய் பக்கவாதம் உயர் ரத்த அழுத்தம் புற்றுநோய் அபாயம் அதிகமாக இருக்கிறது. இந்த நோய்களின் காரணமாக நமது உயிருக்கு கூட ஆபத்தாக அமையலாம்.
நமது வளர்ச்சதை மாற்றத்தையும் இது பாதிக்கிறது. இன்சுலின் உற்பத்தி செய்முறையை மெதுவாக்கும் காரணத்தினால் ரத்த சக்கரை கட்டுப்படாமல் இருக்கிறது. நமது உடலின் வயிற்று பகுதியில் கொழுப்பு அதிகமாக இருந்தால் இத்தனை பிரச்சனைகள் வருகின்றது. ஆகையால் உடற்பயிற்சி செய்து நமது உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்வோம்.




