நமது உணவில் எப்போதும் சேர்த்துக் கொள்ளும் தூளில் ஒன்று மஞ்சள். இதில் மருத்துவ குணங்கள் அதிகமாக இருக்கிறது என்று நமக்கு நன்றாகவே தெரியும். ஆனால் இதை சாப்பிடுவதால் ஏற்படும் பக்க விளைவுகளை பற்றி உங்களுக்கு தெரியுமா. அதைப்பற்றி இந்த பதிவில் தெளிவாக காண்போம்.
மஞ்சள் இல் நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் அதிகமாக இருக்கிறது. இது ஒரு கிருமி நாசினி ஆகும். இதில் எந்த அளவுக்கு நன்மை இருக்கிறதோ அதே அளவு பக்க விளைவுகளும் இருக்கிறது. அதிக அளவு மஞ்சளை உபயோகித்தால் இரும்புச்சத்து உறிஞ்சப்படுவதை பாதிப்படைய வைக்கிறது. சிறுநீரகத்தில் கல் உருவாக இந்த மஞ்சள் ஒரு முக்கிய பங்கை வகிக்கிறது.
சர்க்கரை நோய் இருக்கும் நபர்கள் மஞ்சளை அதிகமாக உபயோகிக்க கூடாது. மஞ்சள் அதிகமாக சாப்பிட்டால் இரத்த உரைதல் தடுக்கப்பட்டு ரத்தப்போக்கு ஏற்படுகிறது. மஞ்சளில் குற்குமின் எனும் வேதிப்பொருள் இருக்கிறது. இதை அதிகமாக உட்கொள்ளும் போது வாயு பிரச்சனை வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சனைகள் உருவாகிறது. ஆகையால் மஞ்சளை அதிகமாக பயன்படுத்தாமல் தேவையான அளவு மட்டும் பயன்படுத்துவது மிகவும் நல்லது.




