பத்து நிமிடத்தில் சுவையான ராகி தோசை செய்வது எப்படி..??

 

தேவையான பொருட்கள்…..

½ கப் சிவப்பு அவுல் 1 கப் கேழ்வரகு மாவு ½ கப் மோர் உப்பு தேவையான அளவு 1 வெங்காயம் பொடியாக நறுக்கியது 2 பச்சை மிளகாய் ஓடியாக நறுக்கியது கறிவேப்பிலை நறுக்கியது  கொஞ்சம் எண்ணெய் தேவையான அளவு

செய்முறை….

முதலில் சிவப்பு அவுல் தண்ணீரால் கழுவி ஒரு கப் தண்ணீரில் 3 நிமிடம் ஊறவைக்கவேண்டும்.

ஒரு மிக்சியில் ஊறவைத்த அவுலை சேர்த்து நைசாக அரைத்துக்கொள்ளவும். பிறகு அதில் கேழ்வரகு மாவு, மோர், தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு அரைத்துக்கொள்ளவும்.தோசைமாவு பதத்திற்கு அரைத்துக்கொள்ளவும். மாவு தண்ணியாக இருந்தால் ½ கப் அளவிற்கு கெளவரகு மாவு சேர்த்துக்கொள்ளலாம்.அடுத்து அடுப்பில் தோசைக்கல்லை வைத்து சிறிது எண்ணெய் விட்டு ஒரு கரண்டி மாவை எடுத்து தோசை போல் ஊற்றி அதன் மேல் நறுக்கிய வெங்காயம் கொஞ்சம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை இவற்றை தூவி சுற்றிலும் எண்ணெய் விட்டு திருப்பிப்போட்டு வெந்ததும் எடுத்து பரிமாறவும்.இப்பொழுது சுவையான ராகி தோசை ரெடி.

 

Read Previous

அன்பு இருக்கும் இடமெல்லாம் செல்வமும் வெற்றியும் இருக்கும் என்பதை உணர்த்திய பதிவு..!!

Read Next

கை மற்றும் கால்களில் சுளுக்கு ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும் தெரியுமா..?? கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular