மதுரை முருக பக்தர்கள் மாநாட்டில் எடுக்கப்பட்ட 6 தீர்மானங்கள் என்ன?..

மதுரையில் நேற்று (ஜூன் 22) நடைபெற்ற முருக பக்தர்கள் மாநாட்டில், 2026 ஆம் ஆண்டு நடைபெறும் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்காக இந்துக்கள் அனைவரும் ஒன்றிணைந்து வாக்கு வங்கியை நிரூபிக்க வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மாநாட்டில் பங்கேற்ற லட்சக்கணக்கான மக்கள் சேர்ந்து கந்த சஷ்டி கவசம் பாடியதன் மூலம் கின்னஸ் சாதனை படைத்தனர். இந்த மாநாடு, இந்து முன்னணி சார்பில் மதுரையில் நடத்தப்பட்டது. இதில், இந்து முன்னணி நிர்வாகி கிஷோர் குமார் 6 முக்கிய தீர்மானங்களை வாசித்தார்.

தீர்மானங்களில் குறிப்பிடப்பட்ட முக்கிய அம்சங்கள்

திருப்பரங்குன்றம் கார்த்திகை தீபம்: திருப்பரங்குன்றம் மலை மீது கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும். பாகிஸ்தான் தாக்குதலுக்கு பதிலடி: ஆபரேஷன் சிந்தூருக்கு பிரதமர் மோடியை பாராட்டும் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. முருக மலைகளை பாதுகாக்க வேண்டும்: முருக மலைகளை பாதுகாக்க வேண்டியதற்கான முக்கியத்துவமும் வலியுறுத்தப்பட்டது. அறநிலையத் துறையின் செயல்பாடுகள்: கோயில்களின் நிதிகள் தவறாக பயன்படுத்தப்படுவதாக குற்றம்சாட்டப்பட்டு, அறநிலையத் துறை கோயில்களிலிருந்து வெளியேற வேண்டும். கந்த சஷ்டி கவசம்: மாதந்தோறும் கூட்டு வழிபாடு நடத்தும் திட்டம் அறிவிக்கப்பட்டது. அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகளை புறக்கணிக்க வேண்டுமென கோரிக்கை: இந்து மதத்தையும் அதன் நம்பிக்கையையும் இழிவுபடுத்தும் அரசியல் கட்சிகள் மற்றும் நாத்திகவாதிகளுக்கு எதிராக செயல்பட வேண்டும். வரவிருக்கும் தேர்தலில் இந்துக்கள் அனைவரும் ஒற்றுமையாக வாக்களிக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டது.

Read Previous

ஐசிசி 2026 டி20 உலகக்கோப்பைக்கு கனடா கிரிக்கெட் அணி தகுதி..!!

Read Next

நிம்மதி இழப்பது எதனால் தெரியுமா?.. அருமையான பதிவு..!! படித்ததில் மிகவும் பிடித்தது..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular