கல்யாண வீட்டு ரசத்தின் ரகசியம் பற்றி உங்களுக்கு தெரியுமா..??

 

நாம் வீட்டில் வைக்கும் ரசத்தை விட கல்யாண வீடுகளில் பந்தியில் நாம் சாப்பிடும் ரசம் மிகவும் சுவையாக இருக்கும். அதற்கான ரகசியம் என்ன என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

அடுப்பைப் பற்ற வைத்து ஒரு வாணலியில் ஒரு ஒரு டீஸ்பூன் மிளகு மற்றும் ஒரு ஸ்பூன் சீரகம் இரண்டு டீஸ்பூன் தனியா கறிவேப்பிலை சிறிதளவு சேர்த்து நன்றாக வறுத்து மிக்ஸியில் கொரகொரப்பாக அரைத்துக் கொள்ள வேண்டும். அடுத்து வாணலியில் ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய் விட்டு இரண்டு நறுக்கிய தக்காளி மற்றும் நான்கு பூண்டு பல் கருவேப்பிலை இலைகள் சிறிதளவு சேர்த்து நன்றாக வறுக்கவும். புளி கரைசல் கால் கப் மற்றும் மஞ்சள்தூள் ஒரு டீஸ்பூன் தேவையான அளவு நீர் விட்டு இரண்டு நிமிடம் கொதிவிட்டு கால் கப் வெந்து நன்றாக மசித்த துவரம் பருப்பு கரைசலை ஊற்றி ஒரு கொதி வந்ததும் கொடுத்து வைத்துள்ள பொடியை சேர்த்து இறுதியில் உப்பு சேர்த்துக் கொள்ள வேண்டும்.
பின்பு ஒரு வாணலியில் இரண்டு ஸ்பூன் நெய் விட்டு அதில் ஒரு டீஸ்பூன் கடுகு உளுந்தம் பருப்பு ரெண்டு காய்ந்த மிளகாய் சீரகம் 1/4 டீஸ்பூன் கறிவேப்பிலை இதழ்கள் சேர்த்து நன்றாக புரிந்த பிறகு அதை கொதிக்கும் ரசத்தில் சேர்த்து இறக்கவும். இறுதியாக கொத்தமல்லி இலை சிறிதளவு சேர்க்கவும்.

Read Previous

இந்த பொருட்கள் எல்லாம் உங்கள் வீட்டில் இருக்கிறதா..?? அப்போ ஆபத்து உங்களுக்கு தான்..!!

Read Next

இரவில் பால் குடிக்கலாமா..?? குடிக்க கூடாதா..??

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular