Oplus_131072
இதே போல் ஒரு முறை ஆட்டுக்காலை பாயா வைத்து பாருங்கள் ரொம்ப சுவையாக இருக்கும்
ஒரு குக்கரில் சுத்தம் செய்த ஆட்டு கால சேர்த்து
அதில் இஞ்சிபூண்டு விழுது ,
ஒரு தக்காளி ,
ஒரு வெங்காயம் ,
ஒரு ஸ்பூன் மல்லித்தூள்
உப்பு சேர்த்து
15 விசில் வைத்து வேகவைச்சு எடுத்துக்கொள்ளுங்கள்
ஒரு மிக்ஸிஜரில் 2 சில்லு தேங்காய் ,
5 முந்திரி ,
ஒரு ஸ்பூன் சோம்பு ,
ஒரு ஸ்பூன் பொட்டுக்கடலை ,
அரைஸ்பூன் சீரகம் சேர்த்து
மை போல் அரைத்து எடுத்துவைக்கவும்
இன்னொரு குக்கரில் எண்ணெய் ஊற்றி பட்டை ,
கிராம்பு,
ஏலக்காய் ,
சேர்த்தி தாளித்து ஒரு வெங்காயம் ,
ஒரு ஸ்பூன் இஞ்சிபூண்டு பேஸ்ட் ,
ஒரு கை புதினா சேர்த்து
நன்கு வதக்கிவிடவும் பிறகு
ஒரு தக்காளி ,
2 பச்சைமிளகாய் ,
ஒரு ஸ்பூன் மிளகாய்த்தூள் ,
ஒரு ஸ்பூன் மல்லித்தூள் சேர்த்து நன்கு வதக்கி விடவும்
பிறகு வேகவைத்த ஆட்டுக்காலை தண்ணீருடன் சேர்த்து , அரைத்து வைத்த தேங்காய் பேஸ்ட் சேர்த்து தேவையான தண்ணீர் , உப்பு கலந்து
7 விசில் வேகவைத்து
கடைசியில் மல்லித்தழை , ஒரு ஸ்பூன் மிளகு சேர்த்து இறக்கினால் ஆடுகால் பாயா ரெடி அவலோன் சுவை..




