‘உங்க கனவை சொல்லுங்க’ என்ற புதிய திட்டத்துக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஸ் கூறியுள்ளார். பொதுமக்கள் ஒவ்வொருவரும் தங்களது குடும்பம் சார்ந்த கனவை சொல்வதற்கான புதிய திட்டத்தை ஜன.9ம் தேதி பொன்னேரியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். இத்திட்டம் மூலம் 50,000 தன்னார்வலர்களை வைத்து வீடு வீடாக சென்று முத்தாய்ப்பான 3 கனவுகளை சொல்லுங்கள் என்று கேட்போம்’ என கூறியுள்ளார்.




