தமிழக மாநில கல்வி கொள்கையின்படி, 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்காக தயாரிக்கப்பட்ட புதிய பாடத்திட்ட வரைவை அரசு இன்று (ஜன.6) இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. தமிழ், ஆங்கிலம், கணக்கு மற்றும் சமூக அறிவியல் உள்ளிட்ட அனைத்து பாடங்களிலும் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து கல்வியாளர்கள் மற்றும் பொதுமக்கள் தங்கள் கருத்துக்களை tnschools.gov.in என்ற இணையத்தளத்தில் தெரிவிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.




