தண்டவாளத்தில் மது அருந்தி ரயில் மோதி இளைஞர் பலி..!!

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே சாமிநாயக்கன்பட்டியைச் சேர்ந்த தனுஷ் (18) அழகாபுரம் பகுதியில் வாட்டர் சர்வீஸ் கடையில் வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் வீட்டை விட்டு வெளியே சென்றவர் வீடு திரும்பாததால் பெற்றோர் தேடினர். வீட்டின் அருகே தண்டவாளப் பகுதியில் ரயில் மோதி உடல் துண்டான நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். மது அருந்தும் பழக்கம் இருந்த தனுஷ், சம்பவத்தன்று மதுபாட்டில் வாங்கி தண்டவாளத்தில் அமர்ந்து அருந்தியபோது ரயில் மோதி பலியானதாக போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுகுறித்து சேலம் ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read Previous

நாங்க வெறும் கணவன் – மனைவி மட்டும் இல்ல.. ஒருத்தருக்கு ஒருத்தர் பெஸ்ட் ப்ரண்ட்ஸ்..!!

Read Next

3-வது ஒரு நாள் போட்டி: தொடரை வெல்லுமா இந்திய அணி?..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular