இந்த காலகட்டத்தில் எல்லாம் சிறிய தலைவலி என்றாலே நாம் மருத்துவமனைக்கு செல்கிறோம். இந்நிலையில், நம் முன்னோர்களின் காலகட்டத்தில் எல்லாம் வீட்டிலேயே இயற்கையான முறையில் வீட்டு வைத்தியம் அனைத்து வகையான நோய்களுக்கும் வீட்டு வைத்தியம் செய்து சரி செய்ய பார்ப்பார்கள். முடியாத பட்சத்தில் தான் மருத்துவமனை செல்வார்கள். இந்நிலையில்,நம் உடலில் இயற்கையாக ஏற்படும் புண்களையும் வெட்டுக்காயங்களால் ஏற்படும் ரணங்களையும் வெகு எளிதில் ஆற்றுவதற்கு எளிய வீட்டு வைத்தியம்.
ஒரு வாணலியில் சிறிது தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும் நன்கு சூடேறிய பிறகு அதில் சிறிதளவு சாம்பிராணியும், கற்பூரத்தையும் (சூடம்) பொடியாக்கி சேர்த்து சூடேற்ற வேண்டும். பின்னர் அந்த எண்ணையை குளிரச் செய்து வெதுவெதுப்பான பதத்தில் புண்கள் மீது தடவினால் போதும். எவ்வளவு நாள்பட்ட புண்களாக இருந்தாலும் உடனடியாக குணமாகிவிடும்.




