Oplus_131072
ஆண்களுக்கும் வெட்கம் உண்டு… தன் முதல் காதலிக்கு காதல் கடிதம் கொடுக்கும் நேரத்தில்…
ஆண்களுக்கும் கூச்சம் உண்டு.. திருமண பேச்சு அம்மா முதன்முதலாய் சொல்லும் நேரத்தில்…
ஆண்களுக்கும் மாதாந்திர வலியுண்டு.. மாச கடைசி மூன்று நாளில் குடும்பத்தை ஓட்டும் நேரத்தில்…
ஆண்களுக்கும் பிரசவ வலி உண்டு.. மனைவி தலை பிரசவத்தில் இருக்கும் நேரத்தில்…
ஆண்களுக்கும் பயமுண்டு..
குடும்ப பொறுப்பை ஏற்று அவர்கள் நிற்கும் நேரத்தில்…
ஆண்களுக்கும் கற்பு உண்டு.. காதலி இருக்கும் போது மற்ற பெண்கள் பேசும் நேரத்தில்…
ஆண்களுக்கும் திமிர் உண்டு.. அனைத்து வலிகளையும் சேர்த்து அழும் நேரத்தில்…
ஆண்களுக்கும் அழகு உண்டு.. அங்கங்கே அரும்பு மீசை முளைக்கும் நேரத்தில்…
ஆண்களுக்கும் மானம் உண்டு… அலுவலத்தில் நாலு பேர் முன்னே மேனேஜர் திட்டும் நேரத்தில்…
ஆண்களுக்கும் அழுகை உண்டு.. பல ஏமாற்றங்களை நெஞ்சில் சுமந்த நேரத்தில்…
ஆண்களுக்கும் தாய்மை உண்டு… தன் மகன், மகளை ஆசையாய் கொஞ்சும் நேரத்தில்…
ஆண்களுக்கும் நாணம் உண்டு.. காதல் சொன்னதும் காதலி முகம் பார்க்கும் நேரத்தில்…
ஆண்களுக்கும் பொறுப்பு உண்டு.. தனக்கு சாப்பிடாமல் தன் குழந்தைகளுக்கு ஊட்டும் நேரத்தில்…
ஆண்களுக்கும் உயிர் உண்டு.. அந்த உயிரில் மனைவி, குடும்பம், குழந்தைகள் கலந்த நேரத்தில்…
ஆண்களுக்கும் மனம் உண்டு.. அந்த மனதில் ஈரம் உண்டு.. அந்த ஈரத்தில் பாசம் உண்டு.. அந்தப் பிரிவில் மனைவி மக்கள் உண்டு.. அந்த குடும்பத்தில் தன்னையே அர்ப்பணித்து முழுதாய் அன்பு செலுத்தும் உயரிய ஜீவன் உண்டு..



