பூனைக்காலி என்ற மூலிகையின் முக்கிய பயன்கள்..!!

Oplus_131072

 

மருத்துவப்பயன்கள் -: பூனைக்காலி பூவும் விதையும், வேரும் ஆண்மையைப் பெருக்கி, நரம்புகளை உரமாக்குகிறது.

பூனைக்காலி விதை பொடியை அரை ஸ்பூன் அளவு தினந்தோறும் காலை, மாலை இருவேளை பாலில் அருந்தி வர, மேக நோய்கள் நீங்குவதோடு ஆண்மை பெருகும்….

பூனைக்காலி விதை நீக்கிய ஓட்டை சுனையுடன் தேனில் நன்றாக ஊறவைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அதை எடுத்து அதன் சுனையை மெதுவாகச் சுரண்டி தேனுடன் நன்கு குழகுழப்பு பதம் வரும் வரை கல்கிக் கொண்டே இருக்க வேண்டும். இதனை தினந்தோறும் காலையில் சிறுவர்களுக்கு ஒரு மேஜைக்கரண்டியும், பெரியவர்களிக்கு இரண்டு மேஜைக் கரண்டியும் நான்கு நாட்கள் தொடர்ந்து கொடுத்து வர, கழிசல் உண்டாக்கி, வயிற்றிலுள்ள புழுக்களும் சாகும்.பூனைக்காலி காயை இதன் விதைகளை நீக்கி விட்டு நன்றாக உலர்த்தி, இடித்து எடுத்துக் கொள்ள வேண்டும்.. இதனை முறைப்படி கஷாயம் இட்டு, வடிகட்டிக் கொண்டு அதில் சிறிது காட்டத்திப்பூ சேர்த்து நாற்பது நாட்கள் வரை மண்ணில் புதைத்து வைத்து, தக்க அளவு எடுத்து அருந்தி வர, ரத்தசோகை நோய் குணமாகும். கை கால் வீக்கமும் குறையும்

பூனைக்காலி வேரை முறைப்படி கஷாயமிட்டு முப்பது மி.லி.முதல் அறுபது மி.லி. வீதம் கலந்து அருந்தி வர ஊழி நோய், சுரம் முதலியவைகளில் காணப்படும் வாதம், பித்தம், கப நோய் நீங்கும்.

பூனைக்காலி வேரை அரைத்து யானைக்கால் நோயால் ஏற்பட்ட வீக்கத்திற்கும் இதர வீக்கங்களிக்கும் பற்றிடலாம்.

பூனைக்காலி விதை தேள் கடிக்கு, சிறந்த மருந்தாக்ப் பயன்படுகிறது.

Read Previous

மண் பாத்திரங்களை பழக்குவது எப்படி..??

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular