விளக்கேற்றிய வீடு வீண்போகாது..!! தீப ஒளியின் பின்னால் ஒளிந்திருக்கும் வியக்கத்தக்க அறிவியல்..!!

Oplus_131072

 

விளக்கு எரிந்த வீடு வீணாய் போகாது என்று பழமொழி உண்டு. நாம் வீட்டிலும் கோவிலிலும் ஏன் விளக்கேற்றுகிறோம் தெரியுமா?. தீபத்தின் சுடருக்கு தன்னைச் சுற்றியுள்ள தேவையற்ற எதிர்மறை சக்திகளை ஈர்க்கும் சக்தி உண்டு. அவ்வாறு ஈர்க்கும்போது நம்மைச்சுற்றி நேர்மறை சக்தி அதிகரிக்கும். நம் சுற்றுப்புறம் தெளிவாகவும் புத்துணர்ச்சியோடும் காணப்படும். இரண்டு நாள் வீட்டில் விளக்கேற்றாமல இருந்தால் வீடே மயானம் போல் இருக்கும்‌. எல்லோரும் சோர்வாக இருப்பார்கள்‌ இதுவே விளக்கேற்றுவதன் தத்துவம்.

நம் உடலில் இருக்கும் ஏழு சக்கரங்களில் மூலாதாரமும், ஸ்வாதிஷ்டானமும் நல்லெண்ணேய் விளக்கு ஏற்றுவதால் தூய்மையடைகிறது. அதேபோல் மணிபூரகம், அனாகதம் என்ற இரண்டு சக்கரங்கள் நெய்விளக்கு ஏற்ற தூய்மை அடைந்து நற்பலன்களை அடைகிறது.

நம் உடலில் சூரிய நாடி, சந்திர நாடி, சுஷம்னா நாடி ஆகியவைகள் மிக முக்கியமாக கருதப்படுகிறது. சூரிய நாடி நல்ல சக்தியையும் வெப்பத்தையும் தருகிறது. சந்திர நாடி குளுமையைத் தருகிறது‌ சுஷம்னா நாடி பரம்பொருள் உடன் சம்பந்தப்பட்டது ஆன்மிக பாதையை வகுக்கிறது.

நல்லெண்ணெய் விளக்கு ஏற்ற சூரிய நாடி சுறுசுறுப்பை அடைகிறது. நெய் விளக்கு சுஷம்னா நாடியை தூண்டிவிட உதவுகிறது‌. பொதுவாக நெய் தீபம் சகலவிதமான சுகம்களையும் நலன்களையும் அளிக்கிறது. திருவிளக்கு எப்போது வேண்டுமானாலும் ஏற்றலாம். பொதுவாக மாலை மாலை 6.30மணிக்கு கருக்கல் நேரத்தில் ஏற்றுவது நம் மரபு. சூரியன் மறைந்ததும் சில விஷசக்திகள் சுற்றுச் சூழலில் பரவி வீட்டிற்குள் வர வாய்ப்பிருக்கிறது. விளக்கொளியில் முன்பு விஷசக்திகள் அடிபட்டுப் போகும். எனவே விளக்கேற்றும் தில் அறிவியல் உண்மை உள்ளது.

அமெரிக்காவில் இருக்கும் தன் மகனும் மருமகளும் தாமதமாக வீட்டிற்கு வருவதை பார்க்கிறார். ஒவ்வொரு நாளும் இருவரும் சோர்வுடனேயே வீடு திரும்புவார்கள்.‌ ஒரு தாய்‌ அவர்கள் தாமதமாக வருவதற்கு காரணம் கேட்க எங்கள் இருவருக்கும் பயங்கர ஸ்ட்ரெஸ். இருவரும் கவுன்சலிங் போய் வருகிறோம்‌. டாக்டர் சிகிச்சையில் சரியாகிவிடும் என்று இருவரும் கூறினர். ஆயிரக் கணக்கில் மருத்துவரிடம் நிம்மதி தேடி அலையும் அவர்களை தாய் நாளை டாக்டரிடம் செல்லவேண்டாம். சீக்கிரம் வீட்டிற்கு வாருங்கள் என்றார்.

அடுத்த நாள் மாலை வீட்டுக்குள் நுழைய மூக்கைத் துளைத்தது நல்ல நறுமணம்‌ இருவரையும் உடை மாற்றி பூஜை அறை வரும்படி தாய் கூறினார்‌. அவர்களும் பூஜை அறை செல்ல மலர்களின் வாசம் அழகான தீப ஒளிநிறைந்த அந்த அறையில் சற்றுநேரம் அமரச் சொன்னார். இருவரும் கண்மூடி அந்த வாசனையை அனுபவிக்கின்றனர். பின் கண் விழித்தபோது கவுன்சலிங்கில் கிடைக்காத அமைதி அந்த சூழல் வந்ததாகக் கூறினர்.

குறிப்பு:

மெழுகுவர்த்தி புகை ஏற்றினால் உடல்நலம் பாதிக்கும். ஆஸ்துமா மார்பு புற்று நோய் ஏற்படலாம். மண்ணெண்ணை விளக்கும் நல்லதல்ல. வீட்டில் பெண் குழந்தைகள் இருந்தால் அவர்களை விளக்கேற்றும்படி சொல்லவேண்டும். அது அவர்களின் முகத்தை மிகப் பொலிவாக்கும். விளக்கேற்றிய வீடு வீண்போகாது. வீட்டில் விளக்கேற்றுவதால் வீட்டு மனிதர்களுக்கு அமைதியும் மகிழ்ச்சியும் கிடைக்கும்.

Read Previous

எருக்கன் செடி..!! சித்த வைத்திய முறைகள்..!!

Read Next

உடல் பருமனை குறைக்க.. இதை பயன்படுத்தி பாருங்க..??

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular