இந்தியா போஸ்ட் பேமென்ட் வங்கி மக்களுக்கான ஒரு நல்ல சலுகையை வழங்கி உள்ளது. தனிநபர் விபத்து காப்பீடு, ஹெல்த் பிளஸ் மற்றும் எக்ஸ்பிரஸ் ஹெல்த் பிளஸ் என்கிற இரண்டு வகைகளில் இந்த வங்கியில் கிடைக்கிறது. பாலிசிதாரர் ரூ.355 செலுத்தினால் ரூ.5 லட்சம் பாலிசி தொகை கிடைக்கும். ஆண்டுக்கு ரூ.555 செலுத்தினால் ரூ.10 லட்சம் பாலிசி எடுத்துக் கொள்ளலாம். ஆண்டுக்கு ரூ.755 செலுத்தினால் ரூ.15 லட்சம் பாலிசி எடுத்துக் கொள்ளலாம். மரணம் அல்லது விபத்தில் உறுப்புகள் இழப்பு ஏற்பட்டால் 100% காப்பீட்டுத் தொகையும், எலும்பு முறிவுக்கு ரூ.25,000 பணமும் இந்த மூன்று பாலிசியிலும் கிடைக்கிறது.