இந்தியாவில் பல்வேறு நோய் தாக்கங்கள் ஏற்பட்டு வருகின்ற நிலையில் மீண்டும் சந்திபுரா வைரஸ் பரவுவதாக இந்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது..
ஜூன் மாதம் முதல் ஆகஸ்ட் 15 வரையான காலகட்டத்தில் குஜராத் மற்றும் ராஜஸ்தான் மாநிலத்தில் 245 பேருக்கு சந்திப்புரா வைரஸ் நோய் தொற்று பரவி உள்ளது, இந்த வைரஸ் காய்ச்சலினால் பாதிக்கப்பட்ட 64 பேர் உயிரிழந்தனர், மணல் ஈக்களினால் உருவாகும் இந்த சந்திப்பு வைரஸ் ஆனது மழைக்காலங்களிலேயே அதிகம் வருகிறது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர், இந்தியாவில் பலருக்கும் இந்த சந்திப்புரா வைரஸ் தொற்று ஏற்பட இருப்பதாக உலக சுகாதார மையம் ஆய்வு செய்த அறிக்கையின் மூலம் வெளியிட்டுள்ளது, மேலும் தமிழகத்தில் சந்திப்புரா வைரஸ் நோய் தொற்று பரவாமல் இருப்பதற்கு சுகாதாரத் துறை மூலம் மக்களுக்கு தேவையான மருந்துகள் மற்றும் கொசுக்களை மற்றும் மணல் ஈக்களை அழிப்பதற்கான மருந்துகளை விரைவில் செயல்படுத்துவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது…!!