இறைச்சி கறியை மிஞ்சும் சுவையில் காளான் சட்னி..!! இப்படி ஒரு முறை செய்து பாருங்க..!!

பொதுவாகவே அசைவ பிரியர்களும் விரும்பி உண்ணும் உணவுப்பட்டியலில் காளான் நிச்சயம் இடம்பிடித்துவிடும். அந்தளவுக்கு தனித்துவமான சுவை கொண்ட காளான் ஏராளமாக ஆரோக்கிய நன்மைகளையும் கொண்டுள்ளது. குறிப்பாக அதிகம் காளான் சாப்பிடுபவர்களுக்கு உடலில் இந்த செலினியம் சத்து அதிகரித்து உடலின் எலும்புகளின் உறுதித்தன்மையை அதிகப்படுத்துகிறது.

பற்கள், நகங்கள், தலைமுடிகள் வளர்ச்சிக்கும் உறுதுணை புரிகிறது. ஆண்களுக்கு உயிரணுக்களை அதிகப்படுத்தி மலட்டு தன்மையை நீக்குகிறது. இதயத்தை பாதிகாப்பதிலும் காளானின் பங்கு அதிகம். பொதுவாக உயர் இரத்த அழுத்தம் ஏற்படும்போது நிலையைச் சரிசெய்ய பொட்டாசியம் சத்து தேவை. அவை உணவுப்பொருட்களின் மூலம் கிடைப்பது சாலச் சிறந்தது. மலச்சிக்கலைத் தீர்க்கும் தன்மை கொண்டது.

கடும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உடல் இளைத்தவர்கள் தினமும் காளானை உணவில் சேர்த்துக்கொள்வதால் விரைவில் இழந்த பலத்தை மீண்டும் பெறலாம். இவ்வளவு ஆரோக்கிய நன்மைகள் மற்றும் மருத்துவ குணம் நிறைந்த காளானை கொண்டு சற்று வித்தியாசமான முறையில் சட்னி செய்வது எப்படி என இந்த பதிவில் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

காளான் – 200 கிராம்

நறுக்கிய வெங்காயம் – 1கப்

வரமிளகாய் – 5

எண்ணெய் – 1 தே.கரண்டி

பூண்டு – 4 பல்

இஞ்சி – 1 துண்டு

புளி – சிறிதளவு

உப்பு – தேவையான அளவு

துருவிய தேங்காய் – 1கப் ஷ

தாளிக்க:

எண்ணெய் 1 தே.கரண்டி

கடுகு – அரை தே.கரண்டி

உளுந்து – 1 தே.கரண்டி

பெருங்காயத்தூள் – 1 தே.கரண்டி

கறிவேப்பிலை – சிறிதளவு

செய்முறை:

முதலில் காளானை நன்றாக தண்ணீரில் அலசிவிட்டு வெட்டி தனியாக ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்.  பின்னர் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் சேர்த்து 5 வரமிளகாய், நறுக்கி வைத்திருக்கும் வெங்காயம் 1 கப் சேர்த்து வதக்கவும்.

பின்னர் வெட்டி வைத்திருக்கும் மஷ்ரூமை சேர்த்து கிண்டவும். இத்துடன் பூண்டு 4, இஞ்சி 1 துண்டு, புளி சிறிது சேர்த்து நன்றாக வதக்கவும். இந்த கலவை நன்றாக வதங்கியதும், தேவையான அளவு உப்பு சேர்த்து அடுப்பை அணைத்து விடவும். – இந்த கலவை ஆறியதும் மிக்ஸியில் சேர்த்து கூட 1 கப் தேங்காய் வைத்து நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

அதனையடுத்து பாத்திரத்தில் எண்ணெய் விட்டு கடுகு சேர்த்து பொரிய விடவும். கடுகு பொரிந்ததும் அதில் 1 ஸ்பூன் உளுந்து, ஒரு சிட்டிகை பெருங்காயத்தூள் ½ தேக்கரண்டி, கறிவேப்பிலை சிறிதளவு சேர்த்து நன்றாக பொரிந்ததும் தாளிப்பை சட்னியில் சேர்த்து கிளறிவிட்டால் அவ்வளவு தான் அசத்தல் சுவையில் ஆரோக்கியம் நிறைந்த காளான் சட்னி தயார்.

Read Previous

நாவூரும் சுவையில் முட்டை குழம்பு..!! இப்படி செய்தால் துளியும் மிஞ்சாது..!!

Read Next

நீரிழிவு நோயினைக் கட்டுக்குள் வைக்க வேண்டுமா..?? பழங்களில் தோல் மட்டும் போதுமாம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular